அவதானமாக இருக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தல்
ஜனாதிபதி அலுவலகத்தில் பதவி வகிப்பதாக போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து மோசடி செய்யும் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு ஜனாதிபதி அலுவலகம் பொது மக்களை அறிவுறுத்தியுள்ளது.
மோசடி சம்பவங்கள்
முதலீட்டாளர்கள், வேலை தேடும் இளைஞர்கள், பல்வேறு நாடுகளுக்கு விசா பெற முயற்சிப்பவர்கள் என பலரை ஏமாற்றி, பணம் பெறும் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இவ்வாறான நபர்கள் குறித்து சந்தேகம் ஏற்பட்டால் ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் பிரசாத் செனரத் என்ற அதிகாரியை +94 71 530 8032 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக தொடர்புகொண்டு, தகவல் பெற்றுக்கொள்ளுமாறும் ஜனாதிபதி அலுவலகம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.