அந்த ஒரு பயம்… மனைவி, பிள்ளைகளை மலை உச்சியில் இருந்து தள்ளிவிட்ட இந்திய வம்சாவளி மருத்துவர்
அமெரிக்காவில் மலை முகட்டில் இருந்து காருடன் தள்ளிவிட்டு தமது மனைவி மற்றும் இரு பிள்ளைகளை கொல்ல முயன்ற இந்திய வம்சாவளி மருத்துவர் தொடர்பில் சில்லிட வைக்கும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
250 அடி மலை முகட்டில்
தமது குடும்பத்தை பாதுகாக்கும் பொருட்டே அந்த கலிபோர்னியா மருத்துவர் 250 அடி மலை முகட்டில் தமது டெஸ்லா காருடன் பயணித்ததாகவும், அங்கிருந்து காருடன் தமது குடும்பத்தினரை தள்ளிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
42 வயதான தர்மேஷ் பட்டேல் உளவியல் ரீதியான குழப்பத்தில் இருந்ததாகவும், தனது இரண்டு குழந்தைகளும் துஸ்பிரயோக கடத்தலுக்கு ஆளாவார்கள் என்று அவர் அஞ்சியதாகவும் மருத்துவர் ஒருவர் சாட்சியம் அளித்துள்ளார்.
தமது குடும்பத்தினருக்கு ஏற்படவிருக்கும் மிக மோசமான சூழலில் இருந்து அவர்களை காப்பது தமது பொறுப்பு என அப்போது அவர் நம்பியுள்ளார். தமது பிள்ளைகள் இருவரும் எப்போது வேண்டுமானாலும் கடத்தப்படலாம் என்றும், துஸ்பிரயோகத்திற்கு அவர்கள் இரையாகலாம் என்றும் அவர் கவலை கொண்டுள்ளார்.
குறிப்பாக அமெரிக்காவில் ஃபெண்டானில் பயன்பாடு அதிகரித்துள்ளது பற்றிய கவலைகளும் அவருக்கு உளவியல் பாதிப்பை உருவாக்கியிருக்கலாம் என அந்த மருத்துவர் குறிப்பிட்டுள்ளார்.
உளவியல் பாதிப்பு
Redwood நகர சிறையில் அடைக்கப்பட்டுள்ள மருத்துவர் தர்மேஷ் பட்டேல் மீது பதியப்பட்டுள்ள மூன்று கொலை முயற்சி வழக்கில் குற்றவாளி என இதுவரை நிரூபிக்கப்படவில்லை.
2023 ஜனவரி 2ம் திகதி, 250 அடி மலை முகட்டில் இருந்து அவரது டெஸ்லா வை மொடல் கார் விபத்தில் சிக்கியது. அந்த காரில் தர்மேஷ் பட்டேலின் மனைவியும் மகனும் மகளும் இருந்துள்ளனர்.
பட்டேலுக்கு உளவியல் பாதிப்பு இருப்பது மருத்துவர்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமது குடும்பத்தை கொலை செய்ய முன்ற அந்த நாட்களில் அவரது பாதிப்பு அதிகமாக இருந்தது என்றும் கூறுகின்றனர்.
எதிர்வரும் மே 2ம் திகதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.