வேலையை விட்ட நபர்; அலுவலகத்திற்கு வெளியே குத்தாட்டம் – கடுப்பான மேலாளர்!
வேலையை ராஜினாமா செய்த வாலிபர், அதனை இசை வாத்தியங்கள் முழங்க கொண்டாடிய வினோத சம்பவம் நடந்துள்ளது.
ஊதிய உயர்வு
புனேவை சேர்ந்த அங்கித் என்பவர் தனியார் நிறுவனம் ஒன்றில் விற்பனை பிரதிநிதியாக பணிபுரிந்து வந்தார். கடந்த 3 ஆண்டுகளாக கடுமையாக உழைத்தும் அவருக்கு ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
மேலும், அந்நிறுவனத்தின் உரிமையாளர் ஊழியரை மதிப்பதும் இல்லை என்றும் சொல்லப்படுகிறது. இதனால் வேலையை விட முடிவு செய்த அங்கித், அதனை உற்சாகமாக கொண்டாடவும் முடிவு செய்தார்.
ராஜினாமா
இதற்காக டோல் இசைக்கலைஞர்களை ஏற்பாடு செய்தார். இதனையடுத்து பணியை ராஜினாமா செய்து அலுவலகத்திற்கு வெளிய வந்த அவர், இசை வாத்தியங்கள் முழங்க ஆடிப்பாடி மகிழ்ச்சியுடன் வேலையை விட்டுச் சென்றார்.
இந்த சம்பவம் அந்நிறுவனத்தின் மேலாளர் முன்னிலையிலேயே நடந்தது. இதனால் ஆத்திரமடைந்த மேலாளர் அங்கிருந்தவர்களை வெளியேறும்படி கோபத்துடன் கூறினார். வேலையில் இருந்து நின்றதை வாலிபர் கொண்டாடும் வீடியோ சமூகவலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.