ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின்(DTNA) அம்பாறை மாவட்ட குழுக் கூட்டம்
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் அம்பாறை மாவட்டக்குழு அங்குரார்ப்பண கூட்டம்-
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA)யின் அம்பாறை மாவட்டக் குழுவின் அங்குரார்ப்பணக் கூட்டம் இன்று(28) நடைபெற்றது.
இக்கூட்டத்தில், கூட்டணியின் செயலாளர் நா. இரட்ணலிங்கம், தேசிய அமைப்பாளர் கோ.கருணாகரம் (ஜனா), துணைத் தேசிய அமைப்பாளர் இரா.துரைரெட்ணம், நிறைவேற்றுக்குழு உறுப்பினர்கள் க. சிவநேசன், கைலாஸ் மற்றும் கூட்டணியின் அம்பாறை மாவட்டக்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது ஒவ்வொரு கட்சியிலும் இருந்து தலா மூன்று பிரதிநிதிகள் அடங்கலாக மாவட்டக்குழு உருவாக்கப்பட்டதுடன், மாவட்டக் குழுவின் இணைப்பாளராக ஹென்றி மஹேந்திரன் அவர்கள் தெரிவு செய்யப்பட்டார்.