பிரித்தானியாவில் புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் ஒரு புதிய செய்தி
புகலிடக்கோரிக்கையாளர்களை ருவாண்டாவுக்கு நாடுகடத்தும் திட்டம், எதிர்பார்த்ததைவிட விரைவாக நடைமுறைப்படுத்தப்படலாம் என்ற செய்தி வெளியாகியுள்ளதுடன், புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் ஒரு செய்தியும் வெளியாகியுள்ளது.
அச்சத்தை ஏற்படுத்தும் ஒரு செய்தி
புலம்பெயர்தல் சேவை அலுவலகங்களுக்கு, வழக்கமான கூட்டங்களுக்கு வரும் அகதிகளையும், ஜாமீன் தொடர்பான அப்பாயின்ட்மெண்ட்க்காக வருபவர்களையும் தடுப்புக்காவலில் அடைக்க அதிகாரிகள் திட்டமிட்டுவருவதாக தி கார்டியன் பத்திரிகை தெரிவித்துள்ளது.
10 முதல் 12 வாரங்களில் நாடுகடத்தப்படும் புகலிடக்கோரிகையாளர்களின் முதல் குழுவுடன் விமானம் ஒன்று ருவாண்டாவுக்கு புறப்படும் என கூறப்பட்ட நிலையில், எதிர்பார்க்கப்பட்டதைவிட விரைவாகவே புகலிடக்கோரிக்கையாளர்களை நாடுகடத்துவது தொடர்பான நடவடிக்கைகளை அதிகாரிகள் துவக்க உள்ளார்களாம்.
இது தொடர்பாக நாடாளுமன்றம் முன் பேசிய பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக், நாடுகடத்தப்பட இருக்கும் புகலிடக்கோரிகையாளர்களை தடுப்புக் காவலில் அடைப்பதற்காக, 2,200 பேரை அடைக்கும் அளவுக்கு தடுப்புக் காவல் மையங்களில் இடம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.