கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய தங்க கடை
கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்படும் இடம்/நடமாடும் வலயத்தில் தங்க கடையொன்றை அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
விமான நிலையத்தில் தங்க வணிகத்தை புதிய வர்த்தக வாய்ப்பாக அறிமுகப்படுத்துவதன் பொருத்தம் பரிசீலிக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான முன்மொழிவை வரையறுக்கப்பட்ட விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனம் (airport and aviation services private limited) சமர்ப்பித்துள்ளது.
தற்போது பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இவ்வசதிகள் இன்மையால், குறித்த நிறுவனம் புறப்படும் பகுதியில் தங்கக் கடை ஒன்றை அமைக்கத் திட்டமிட்டுள்ளது.
அமைச்சரவை அங்கீகாரம்
இந்த நிலையில், தங்க நகைக்கடையை அமைப்பதற்காக பொருத்தமான இயக்குநர் ஒருவரைத் தெரிவு செய்வதற்காக சர்வதேச போட்டி விலைமுறி முறைமையைக் கடைப்பிடித்து விலை மனுக் கோரலை மேற்கொள்வதற்காக துறைமுகங்கள், கப்பல் துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.