;
Athirady Tamil News

கொழும்பு வாழ் மக்களுக்கு பொலிஸ் திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவித்தல்

0

கொழும்பு மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வீதி விளக்குகளுக்கு அருகில் வந்து யாசகம் கேட்பவர்களுக்கு பணம் வழங்க வேண்டாம் என பொலிஸ் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

45 பொலிஸ் பிரிவுகள் மற்றும் 607 பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த உத்தியோகத்தர்களுக்கு, வாகனப் போக்குவரத்திற்கு இடையூறு விளைவிக்கும் யாசகர்களை அகற்றுமாறு வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின் ஊடாக இந்த விடயம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில் குறித்த சுற்றறிக்கையை மீறிய 94 யாசகர்கள் கடந்த வாரம் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

புனர்வாழ்வு
இருப்பினும், தற்போதைய நிலைமைகளால், அவர்களை நீண்ட காலத்திற்கு காவலில் வைக்க வசதிகள் இல்லாததால், அவர்கள் பிணையில் அனுமதிக்கப்பட்டனர்

இந்நிலையில், கொழும்பு மாநகரசபைக்குள் அண்ணளவாக 180 போக்குவரத்து விளக்குகள் உள்ளன.

அவற்றில் சிவப்பு விளக்குகளை பயன்படுத்தி வீதிகளுக்குள் நுழைந்து பலர் யாசகம் செய்து வருகின்றனர்.

யாசகம் செய்வோரை அகற்றுதல், புனர்வாழ்வளித்தல், கைது செய்தல் போன்றவற்றுக்கு பொலிஸ் திணைக்களத்திற்கு நடைமுறைகள் இல்லை.

எனவே கொழும்பு மாநகர எல்லைக்குள் வீதி விளக்குகளில் யாசகம் செய்வோருக்கு உதவுவதைத் தவிர்க்கும் வகையில் பொலிஸாரின் மும்மொழிகளில் காணொளி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.