நாட்டையே உலுக்கிய வழக்கு; நிர்மலா தேவிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை – நீதிமன்றம் உத்தரவு!
பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
பாலியல் பேரம்
விருதுநகர், அருப்புக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியையாக வேலை பார்த்து வந்தவர் நிர்மலா தேவி. இவர் மாணவிகளிடம் பாலியல் பேரம் பேசியதாக புகார்கள் எழுந்தன.இதனையடுத்து 2018ல் கைது செய்யப்பட்டார்.
மேலும், காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமியும் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்த வழக்கில் மாணவிகளிடமும், போலீஸ் உயர் அதிகாரிகளிடமும் வாக்குமூலங்கள் வாங்கப்பட்டன. விருதுநகரில் உள்ள 2-வது நீதித்துறை நடுவர் மன்றத்தில் இவ்வழக்கு நடைபெற்று வந்தது.
சிறை தண்டனை
1,360 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. பின், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட மகளிர் நீதிமன்றத்துக்கு வழக்கு விசாரணை மாற்றப்பட்டது. சுமார் ஆறு ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
நிர்மலாதேவி முருகன் மற்றும் கருப்பசாமி ஆகியோர் ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் நேரில் ஆஜரானார்கள். அப்போது வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முருகன், கருப்பசாமி ஆகியோரை விடுதலை செய்தும், நிர்மலா தேவியை குற்றவாளி எனவும் தெரிவிக்கப்பட்டது.
அவருக்கான தண்டனை விவரங்களை நேற்று அறிவிப்பதாக தெரிவித்திருந்தார். இதையடுத்து தீர்ப்பு வழங்கிய நீதிபதி பகவதி அம்மாள், நிர்மலா தேவிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். மேலும், நிர்மலா தேவி விருதுநகர் சிறையில் அடைப்பதற்காக போலீஸார் அழைத்துச் சென்றனர்.