கொலம்பியாவில் விழுந்து நொறுங்கிய ஹெலிகொப்டர்: 9 வீரர்கள் பலி
கொலம்பியாவில் இராணுவ ஹெலிகொப்டர் விழுந்து நொறுங்கியதில் ஒன்பது வீரர்கள் பலியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கொலம்பியாவின் வடக்கு பகுதியில் உள்ள சான்டா ரோரா நகராட்சியில் முகாமிட்டுள்ள இராணுவ வீரர்களுக்கு தேவையான பொருட்கள் விமானத்தில் கொண்டு செல்லப்பட்டுள்ளன.
இந்நிலையில் பொருட்களை இறக்கிவிட்டு புறப்பட்ட ஹெலிகொப்டர் சிறிது நேரத்தில் விழுந்து நொறுங்கியுள்ளதுடன் இதில் இருந்த ஒன்பது வீரர்கள் பலியாகியுள்ளனர்.
போதைப்பொருள் கடத்தல்
புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானமானது தரைக்கட்டுப்பாட்டு நிலையத்துடனான தொடர்பை இழந்ததாகவும் பின்னர் சாண்டா ரோசா நகராட்சிக்கு அருகில் விபத்துக்குள்ளானதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த விபத்து குறித்து கொலம்பிய அதிபர் குஸ்டாவோ பெட்ரோ ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளதுடன் போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள இராணுவ வீரர்களுக்கு பொருட்களை வழங்கிவிட்டு திரும்பியபோதே இந்த விபத்து நிகழ்ந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய விடுதலை
சான்டா ரோசா பகுதியில் சமீபத்தில் தேசிய விடுதலை இராணுவத்தின் கொரில்லா குழுவிற்கும் வளைகுடா குலம் எனப்படும் போதைப்பொருள் கடத்தல் குழுவிற்கும் இடையே கடும் சண்டை ஏற்பட்டது.
இதையடுத்தே குறித்த இராணுவ வீரர்கள் அங்கு குவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.