ஜேர்மனியில் காணாமல்போன குழந்தையைத் தேடும் 1,200 மீட்புக்குழுவினர்
ஜேர்மனியில் காணாமல்போன ஒரு ஆறுவயது சிறுவனை, பொலிசார், ராணுவத்தினர், தீயணைப்புக்குழுவினர், அவசர உதவிக்குழுவினர், தன்னார்வலர்கள் என சுமார் 1,200 பேர் தேடிவருகிறார்கள்.
காரணம், அந்தக் குழந்தை ஆட்டிஸக்குறைபாடு கொண்ட குழந்தை!
பிரம்மாண்ட தேடுதல்
வடக்கு ஜேர்மனியிலுள்ள Bremervörde நகரத்தில் வாழ்ந்துவந்த ஆரியன் (Arian) என்னும் ஆறு வயதுச் சிறுவனைத்தான் இந்த 1,200 பேர் கொண்ட குழு தீவிரமாகத் தேடிவருகிறது.
சிக்கல் என்னவென்றால், சாதாரணமாக சிறுவர்கள் யாராவது காணாமல் போனால், அவர்களுடைய பெற்றோரோ அல்லது பொலிசாரோ அவர்களை சத்தமாக அழைத்தால், அந்த சிறுவர்கள் பதிலுக்கு குரல் கொடுக்க வாய்ப்புள்ளது.
ஆனால், ஆரியன் ஆட்டிஸக்குறைபாடு கொண்ட குழந்தை என்பதால், அவனை அழைத்தாலும் அவனுக்கு பதிலளிக்கத் தெரியாது.
ஆகவே, ட்ரோன்கள், படகுகள், மோப்ப நாய்கள் என பல உதவும் காரணிகளுடன், மீட்புக்குழுவினர் குழந்தையைத் தேடி வருகிறார்கள்.