யாழ்ப்பாண மாவட்ட விவசாய குழுக் கூட்டம்
யாழ்ப்பாண மாவட்ட விவசாய குழுக் கூட்டம் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று (30.04.2024) நடைபெற்றது.
மாவட்ட விவசாயம் சார்ந்த பிரச்சினைகளை இனங்காணல் மற்றும் மாவட்ட விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடி அவற்றிற்கு தீர்வுகண்டு மாவட்ட விவசாயத்தை மேம்படுத்தும் நோக்கில் இக் கூட்டம் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.
பிரதேச மட்ட விவசாய கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் மேலதிக தீர்மானங்கள் குறித்தும் பிரதேச செயலாளர்களால் கலந்துரையாடப்பட்டது.
கடந்த வருடம் நடைமுறைப்படுத்தப்பட்ட விவசாய நவீன மயப்படுத்தல் திட்டம் குறித்தும் விவசாய நவீன மயப்படுத்தலினால் எதிர்கொண்ட நன்மை மற்றும் சவால்கள் குறித்தும், தற்போது அதிகரித்து வரும் தென்னை மரத்தை பாதிக்கும் வெண் ஈ தாக்கம் குறித்தும் அதனை கட்டுப்படுத்தும் செயற்றிட்டங்கள் குறித்தும், விவசாய துறையின் புள்ளிவிபரங்களை துல்லியமாக மேற்கொள்ளல் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
இதன்போது யாழ் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாக சிரேஷ்ட விரிவுரையாளர் அரசகேசரி, மாவட்ட விவசாய பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், கமநல அபிவிருத்தி ஆணையாளர், கால்நடை வளர்ப்பு அபிவிருத்தி ஆணையாளர், அனர்த்த முகாமைத்து பிரிவின் பிரதிப் பணிப்பாளர், மீன்பிடி உதவிப் பணிப்பாளர், நீர்ப்பாசன பொறியியலாளர், மாவட்ட புள்ளிவிபரவியலாளர், விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள், வங்கி மற்றும் காப்புறுதி சேவை வழங்குநர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.