;
Athirady Tamil News

தமிழகம் – யாழ்ப்பாணம் கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்… திகதி வெளியானது!

0

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை இடையேயான கப்பல் சேவையானது இம்மாதம் 13 ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஐ.எஸ்.எச்.ஜே. இலுக்பிட்டிய தெரிவித்தார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,

இந்திய – இலங்கை கப்பல் சேவையை மீண்டும் ஆரம்பிப்பதற்கான பல முயற்சிகள் சீரற்ற கடல் நிலை காரணமாக இரத்து செய்யப்பட்டது.

வட கிழக்கு பருவ மழையின் காரணமாக, குறித்த கப்பல் சேவையை ஒக்டோபர் 20 ஆம் திகதியுடன் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது என தெரிவித்துள்ளார்.

4 தசாப்தங்களின் பின்னர் இந்தியா மற்றும் இலங்கை இடையேயான பயணிகள் கப்பல் சேவை கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்த நிலையில், ‘செரியாபாணி’ எனப்படும் பயணிகள் கப்பல் சேவையின் முதல் பயணத்தில் கிட்டத்தட்ட 50 பயணிகள் வருகை தந்தனர்.

ஷிப்பிங் கோர்ப்பரேஷன் ஓப் இந்தியாவுக்கு (எஸ்.சி.ஐ.) சொந்தமான 35 மீட்டர் நீளமும், 9.6 மீட்டர் அகலமும் கொண்ட ‘செரியாபாணி’ என்ற அதிவேகக் கப்பல் 150 பயணிகளை ஏற்றிச் செல்லும் திறன் கொண்டது.

நாகப்பட்டினத்தில் இருந்து காங்கேசன் துறைமுகத்திற்கு 4 மணித்தியாலங்கள் வரை பயணமாகும் இக்கப்பலில் ஒரு சுற்றுப் பயணத்திற்கு இலங்கை ரூபாய் 26,750 மற்றும் இரண்டு சுற்றுப் பயணங்களுக்கு 53,500 கட்டணம் அறவிடப்படுகின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.