என்ன நடந்தாலும் ரஃபா நகரை தாக்குவது உறுதி., இஸ்ரேல் பிரதமர் திட்டவட்டம்
தெற்கு காசாவில் உள்ள ரஃபா நகரை நிச்சயமாக தாக்குவோம் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெளிவுபடுத்தியுள்ளார்.
போர் நிறுத்தம் குறித்து ஹமாஸ் உடனான பேச்சுவார்த்தைகள் தொடர்கிறது.
இருப்பினும், இந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டாலும் இல்லாவிட்டாலும், இஸ்ரேலியப் படைகள் ஹமாஸை முடிவுக்குக் கொண்டுவர ரஃபாவிற்குள் நுழையும் என்று அவர் கூறினார்.
இதனிடையே இஸ்ரேல்-ஹமாஸ் போர் காரணமாக ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் ரஃபா நகரில் தஞ்சமடைந்துள்ளனர்.
பணயக்கைதிகளை விடுவிக்கவும், ஓரளவு நிவாரணம் பெறவும், இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
ஆனால் ‘எங்கள் இலக்குகளை அடையாமல் போரை நிறுத்துவதில் உடன்பாடு இல்லை. நாங்கள் ரஃபாவில் நுழைகிறோம். ஹமாஸ் படைகளை முற்றாக அழிப்போம்” என்று நெதன்யாகு கூறியுள்ளார்.