இந்தோனேசியாவில் வெடித்த எரிமலை., மலேசியா வரை பரவிய சாம்பல்., சுனாமி எச்சரிக்கை
இந்தோனேசியாவின் ருவாங் மலையில் (Mount Ruang) செவ்வாய்க்கிழமை எரிமலை வெடித்தது.
வெடிப்பைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மறு உத்தரவு வரும் வரை விமான நிலையத்தை மூடுமாறு பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
ருவாங்கை சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் 12,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், ஐந்து கிலோமீட்டர் தூரத்திற்கு யாரும் செல்ல அனுமதி இல்லை. எரிமலை வெடிப்புக்குப் பிறகு சுற்றிலும் இருள் சூழ்ந்தது. அதன் பிறகு மின்னல் மற்றும் நிலநடுக்கம் உணரப்பட்டது, இதன் காரணமாக ஜன்னல்கள் உடைந்தன.
14 நாட்களில் 6வது முறையாக எரிமலை வெடித்துள்ளது. இந்த எரிமலை ஏப்ரல் 16 மற்றும் 30 ஆகிய திகதிகளில் தலா ஒரு முறையும், ஏப்ரல் 17 அன்று நான்கு முறையும் வெடித்தது.
இதன் காரணமாக எரிமலைக்குழம்பு ஆயிரக்கணக்கான அடி உயரத்துக்கு எழுந்து சாம்பல் பரவியது.
இந்த சாம்பல் மலேசியா வரை பரவிய நிலையில், பல விமான நிலையங்களை அவற்றின் செயல்பாடுகளை மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.