Johnson And Johnson டால்கம் பவுடரால் புற்றுநோய்! வழக்கை முடிக்க பல்லாயிரம் கோடியை செலுத்தும் நிறுவனம்
டால்கம் பவுடர் தயாரிப்புகளால் புற்றுநோய் ஏற்படுத்தும் என்ற குற்றச்சாட்டுகள் அடங்கிய வழக்குகளை முடிக்க ரூ.5.42 ஆயிரம் கோடியை செலுத்துவதற்கு ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் முன்வந்துள்ளது.
கடந்த 25 ஆண்டுகாலமாக ஜான்சன் அண்ட் ஜான்சன் துணை நிறுவனத்தின் டால்கம் பவுடர் தயாரிப்புகள், கருப்பை புற்றுநோய் ஏற்படுத்தும் என்ற குற்றச்சாட்டுகள் அடங்கிய வழக்கை முடிக்க 6.48 பில்லியன் டொலர் தொகையை முடிக்க நிறுவனம் முன்வந்துள்ளது.
வழக்கின் விவகாரம்
ஜான்சன் அண்ட் ஜான்சன் டால்கம் பேபி பவுடர்கள், பெண் உறுப்புகளின் சுகாதாரத்திற்காக பயன்படுத்தப்பட்டது.
இதன் மூலம் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் அல்லது மீசோதெலியோமா எனப்படும் நுரையீரல் மற்றும் பிற உறுப்புகளைத் தாக்கும் புற்றுநோய் ஏற்படலாம் என்று குற்றச்சாட்டு எழுந்தது.
இதனால் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் மீது பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கு 20 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் வழக்கை முடித்து வைக்க 6.48 பில்லியன் டொலர் தொகையை முடிக்க நிறுவனம் முன்வந்துள்ளது.
அதோடு, தனது தயாரிப்புகளின் பாதுகாப்பில் சமரசம் செய்யப்படவில்லை என்றும் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் கூறியுள்ளது. மேலும், தமக்கு எதிரான டால்க் தொடர்பான கோரிக்கைகள் தகுதியில்லாதவை என்றும் வலியுறுத்தியுள்ளது.