சொத்து எழுதி தராததால் தாய்க்கு Current ஷாக்! தொடர்ந்து மறுக்கவே கம்பியால் அடித்துக்கொன்ற மகன்
இந்திய மாநிலம் ஆந்திராவில் வளர்ப்பு தாயை மகன் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
வளர்ப்பு மகன்
ஆந்திராவின் பல்நாடு மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தத்து நாயக்.
இவரது தந்தையின் முதல் மனைவியான லட்சுமி பாய், சொந்த மகன் போல தத்து நாயக்கை சிறுவயது முதலேயே வளர்த்து வந்துள்ளார்.
சரியான வேலை இல்லாத தத்து நாயக், வீட்டினை தனது பெயருக்கு எழுதி வைக்குமாறு தாய் லட்சுமி பாயை தொல்லை செய்து வந்துள்ளார்.
இரும்புக் கம்பியால் தாக்கிக் கொலை
ஒரு கட்டத்தில் வளர்ப்பு தாய் என்றும் பாராமல் லட்சுமி பாய்க்கு Current Shock கொடுத்துள்ளார் தத்து நாயக். அப்போதும் அவருக்கு வீட்டினை எழுதி தர லட்சுமி பாய் மறுத்துள்ளார்.
இந்த நிலையில் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற தத்து நாயக், இரும்புக் கம்பியால் லட்சுமி பாயை கடுமையாக தாக்கியுள்ளார். இதில் நிலைகுலைந்து விழுந்து லட்சுமி பாய் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து அறிந்த அக்கம்பக்கத்தினர் பொலிஸாருக்கு தகவல் அளித்துள்ளனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், தத்து நாயக்கை கைது செய்தனர். தற்போது அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.