பிரித்தானியாவில் புலம்பெயர்ந்தோரை கைது செய்யும் அதிகாரிகள்: பரபரப்பை ஏற்படுத்தியுள்ள காட்சிகள்
பிரித்தானியாவிலிருந்து நாடுகடத்தப்பட்ட இருக்கும் சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை, வீடு வீடாகச் சென்று அதிகாரிகள் கைது செய்யும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
நாடுகடத்தப்பட்ட முதல் நபர்
பிரித்தானிய அரசின் ருவாண்டா திட்டத்தின் கீழ், முதல் புலம்பெயர்ந்தோர், திங்கட்கிழமை மாலை ருவாண்டாவுக்குச் செல்லும் விமானத்தில் ஏற்றி அனுப்பப்பட்ட செய்தி வெளியானது.
அதைத் தொடர்ந்து, தாங்களும் நாடுகடத்தப்படலாம் என்னும் அச்சத்தில், ஆயிரக்கணக்கானோர் தலைமறைவாகியிருக்கலாம் என்னும் செய்திகள் வெளியாகத் துவங்கின.
கைது நடவடிக்கை
ஆகவே, நாடுகடத்தப்படுவதிலிருந்து தப்புவதற்காக, புலம்பெயர்ந்தோர் தலைமறைவாவதைத் தடுப்பதற்காக, நேற்று முதல், நாடு முழுவதும் எல்லை பாதுகாப்புப் பொலிசார் ரெய்டுகள் நடத்தத் துவங்கியுள்ளார்கள்.
BREAKING: The first people set to be removed to Rwanda have been detained. pic.twitter.com/2WWNhQVC1l
— Home Office (@ukhomeoffice) May 1, 2024
பொலிசார் வீடு வீடாகச் சென்று சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை கைவிலங்கிட்டு கைதுசெய்து பொலிஸ் வேன்களில் ஏற்றும் காட்சிகளை உள்துறை அலுவலகம் வெளியிட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் ஜூலை மாதம் முதல், ருவாண்டாவுக்கு நாடுகடத்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.