72 நிமிடங்கள் மட்டும்: உலகத்தின் தலைவிதி இந்த நாட்டின் ஜனாதிபதி கையில்தானாம்
ஒரு பக்கம் ரஷ்யா உக்ரைனுடன் மோதிக்கொண்டிருக்கிறது, மறுபக்கம், இஸ்ரேலுடன் ஹமாஸும், ஈரானும் மோதிக்கொண்டிருக்கின்றன. சீனா தைவான் மோதலும் உலகத்தை கவலைக்குள்ளாக்கிவருகிறது.
எந்தப்பக்கத்திலிருந்து என்ன ஆபத்து வருமோ, யார் எடுக்கும் விபரீத முடிவு மூன்றாம் உலகப்போரைத் துவக்கக் காரணமாக அமைந்துவிடுமோ என, உலக மக்கள் அச்சத்தில் இருக்க, யாரும் அதிகம் எதிர்பாராத ஒரு நாட்டிலிருந்து வரும் தாக்குதல் உலகை அழித்துவிடக்கூடும் அபாயம் உள்ளது என்கிறார் புலிட்ஸர் பரிசு பெற்ற ஊடகவியலாளர் ஒருவர்.
72 நிமிடங்கள் மட்டும்
புலிட்ஸர் பரிசு பெற்ற ஊடகவியலாளரான ஆனி ஜாக்கப்சன் (Annie Jacobsen) என்னும் ஊடகவியலாளர், உலகத்தின் விதி வட கொரிய அதிபரான கிம் ஜாங் உன்னின் கையில்தான் உள்ளது என்கிறார்.
தன் நாட்டிலுள்ள அணு ஆயுத ஏவுகணையை, குறிப்பாக ஒரு நாட்டின்மீது கிம் ஏவுவதன் மூலம், போரைத் துவக்கி, உலக நாகரீகத்தையே மொத்தமாக அவர் அழித்துவிடக்கூடும் என்கிறார் ஆனி.
அந்த நாடு அமெரிக்கா. அமெரிக்காவின் வாஷிங்டனிலுள்ள பெண்டகன் மீதும், அணு உலை அமைந்திருக்கும் கலிபோர்னியா மீதும் கிம் அணு ஆயுத தாக்குதல் நிகழ்த்தினால், அதனால் துவங்கும் போர், வெறும் 72 நிமிடங்களில் உலகத்தையே அழித்துவிடக்கூடும் என்கிறார் ஆனி.