பாம்பு கடித்தவரை கங்கையில் வைத்தால் விஷம் இறங்கிவிடும்.., மூட நம்பிக்கையால் பறிபோன உயிர்
கங்கை நதியில் உடம்பை வைத்திருந்தால் பாம்பு கடியின் விஷம் தானாக இறங்கி விடும் என்ற மூடநம்பிக்கையால் ஒரு உயிர் பறிபோகியுள்ளது.
பாம்பு கடிக்கு ஆளாகிய கல்லூரி மாணவர்
இந்திய மாநிலமான உத்தர பிரதேசம், புலன்சாகர் மாவட்டத்திற்கு உட்பட்ட ஜஹாங்கிராபாத் பகுதியில 20 வயது கல்லூரி மாணவர் மோகித் என்பவர் பி.காம் படித்து வந்துள்ளார்.
இவர், கடந்த 26 -ம் திகதி தேர்தலில் வாக்களிப்பதற்காக சொந்த ஊருக்கு வந்துள்ளார். அப்போது வாக்களித்து விட்டு வயல்வெளிக்கு சென்றுள்ளார். அங்கு அவரை பாம்பு கடித்துள்ளது.
பின்னர், மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றுள்ளனர். அங்கு, சரிசெய்ய இயலாது என்று மருத்துவர் கூறியுள்ளார்.
அப்போது, கங்கை நதியில் மோகித்தின் உடலை வைத்திருந்தால் விஷம் இறங்கிவிடும் என்று உறவினர்கள் தெரிவிக்கவே, இரு நாட்களாக உடலை கயிறு கட்டி கங்கை நதியில் வைத்துள்ளனர்.
பின்னர் , பாம்பு விஷம் உடல் முழுவதும் பரவி மோகித் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மூட நம்பிக்கையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.