ஒன்பதாவது பிறந்தநாளை கொண்டாடும் இளவரசர் வில்லியம் மகள் – வைரலாகும் புகைப்படம்
இளவரசி சார்லோட்டின் ஒன்பதாவது பிறந்தநாளை முன்னிட்டு புதிய புகைப்படம் கென்சிங்டன் அரண்மனையால் வெளியிடப்பட்டுள்ளது.
இளவரசர் வில்லியம் மகள்
இளவரசியின் ஒன்பதாவது பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் இளவரசர் வில்லியம் மற்றும் அவரது மனைவி கேட் ஆகியோர் தங்கள் மகள் சார்லோட்டின் படத்தை வெளியிட்டுள்ளனர்.
“9வது பிறந்தநாள் வாழ்த்துக்கள், இளவரசி சார்லோட்!” என்று பதிவிடப்பட்டு x தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.
Happy 9th Birthday, Princess Charlotte! 🎂
Thank you for all of the kind messages today.
📸 The Princess of Wales pic.twitter.com/2DSDiuO93c
— The Prince and Princess of Wales (@KensingtonRoyal) May 2, 2024
இந்த ஆண்டு மார்ச் மாதம் அன்னையர் தினத்தன்று வெளியிடப்பட்ட ஒரு படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதற்காக இளவசரி கேட் மன்னிப்பு கேட்டார்.
சிம்மாசனத்தின் வரிசையில் மூன்றாவது இடத்தில் உள்ள சார்லோட், பெர்க்ஷயரில் உள்ள அஸ்காட் அருகே உள்ள இணை கல்வி தனியார் லாம்ப்ரூக் பள்ளியில் படிக்கிறார்.
மேலும் இளவரசி சார்லோடின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.