மோசமான இடத்தில் தொலைக்காட்சித் தொடர் எடுக்கும் ஹரியின் மனைவி மேகன்? உருவாகியுள்ள சர்ச்சை
இளவரசர் ஹரியின் மனைவியான மேகன், கஞ்சா தோட்டம் ஒன்றில் தொலைக்காட்சித் தொடர் ஒன்றை எடுத்துவருவதாக ஒரு பக்கம் செய்திகள் பரவிவரும் நிலையில், அவை வதந்திகள் என மேகன் தரப்பு தெரிவித்துள்ளது.
கஞ்சா தோட்டத்தில் தொலைக்காட்சித் தொடர்
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் Farmlane என்னும் கஞ்சா தோட்டம் ஒன்று உள்ளது. 2015ஆம் ஆண்டு, மலர்ப்பண்ணை ஒன்றை வாங்கிய David, Cindy Van Wingerden தம்பதியர், அதை கஞ்சா தோட்டமாக மாற்றினார்கள்.
அதனால் அந்தப் பகுதியில் வாழ்வோர், கஞ்சா நாற்றம் வீசுவதாக, 2,340 புகார்கள் பதிவு செய்துள்ளார்கள். அப்படி சர்ச்சை நிலவும் ஒரு இடத்தில் இளவரசர் ஹரியின் மனைவியான மேகன், தொலைக்காட்சித் தொடர் ஒன்றை எடுத்துவருவதாக செய்திகள் பரவிவருகின்றன.
மறுப்பு
ஆனால், அந்த செய்திகளில் உண்மையில்லை. அவை வதந்திகள் என மேகன் தரப்பில் ஒருவர் தெரிவித்துள்ளார். பெரிதும் எதிர்ப்பார்க்கப்படும் தொலைக்காட்சித் தொடர் ஒன்றை மேகன் தயாரித்துவருவது உண்மைதான் என்று கூறிய அந்த நபர், ஆனால், அந்த தொடர் கஞ்சா தோட்டம் ஒன்றில் எடுக்கப்படுவதாகக் கூறப்படுவதில் உண்மை இல்லை என்றார்.
அந்த தொடர் ஒரு தனியார் நபரின் வீட்டில் எடுக்கபடுகிறது என்பது மட்டுமே உண்மை என்று கூறும் அந்த நபர், மற்றபடி மீதமுள்ள செய்திகளில் உண்மையில்லை, அவை கட்டுக்கதை என்கிறார்.