உடல் எடையை குறைக்க புதிய வழி : அனுமதி வழங்கியது கனடா
கனடாவில் உடல் எடையை குறைக்கும் மருந்து வகை பயன்பாட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகவலை கனடா உடற்பருமன் அதிகரிப்பு சிகிச்சைப் பிரிவின் மருத்துவர் சஞ்சீவ் சொக்கலிங்கம் தெரிவித்துள்ளார்.
வெகோவே (Wegovy) என்ற உடல் எடை குறைப்பு மருந்து எதிர்வரும் திங்கட்கிழமை முதல் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
உடல் எடை கூடியவர்கள்
இந்த மருந்தை முக்கியமாக மித மிஞ்சிய அளவில் எடை கூடியவர்களின் எடையை குறைப்பதற்கு பயன்படுத்தப்பட உள்ளது.
மேலும் இரத்த அழுத்தம், நீரிழிவு, தூக்கமின்மை போன்ற நோய் நிலைமைகளை எதிர்நோக்கும் உடல் எடை கூடியவர்கள் பயன்படுத்த முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
வெகோவே மருந்து
இந்நிலையில்,உடலை அழகு படுத்தும் நோக்கிற்காக இந்த மருந்து பயன்படுத்தப்படாது என மருத்துவர் சஞ்சீவ் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் வெகோவே (Wegovy) மருந்து உண்மையான மருத்துவ காரணங்களுக்காக மட்டும் பயன்படுத்தப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.