;
Athirady Tamil News

நீர்வெட்டு நெருக்கடியை எதிர்நோக்கும் ஒட்டுசுட்டான் பிரதேச மக்கள்

0

சிவநகர், வித்தியாபுரம், சின்னச்சாளம்பன் ஆகிய இடங்களுக்கு 48மணித்தியாலயங்கள் நீர் கிடைக்கப்பெறின் அடுத்த 24மணித்தியாலயங்கள் நீர் கிடைக்காத நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலமை நீர்வடிகாலமைப்பு சபையினரிடம் நீர் பற்றாக்குறை காணப்படுவதால் நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஒட்டுசுட்டான் நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினரால் புதிய நீர்வழங்கல் முறை முன்வைக்கப்பட்டுள்ளது.

மக்கள் இந்நாட்களில் நீரை குறைந்தளவு பயன்படுத்துவதுடன் நீரை வீணாக்குவதை மிகவும் குறைக்கவேண்டும்.

நீர் வெட்டுநாட்களில் பயன்படுத்த தேவையான அளவை சேமித்து அந்நீர் மாசடைவதையும் தவிர்த்தல் போன்ற செயற்பாடுகளின் முலம் நீர் நெருக்கடியை எதிர்கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.