திருநாவுக்கரசு நாயனார் குருபூசை
சமயகுரவர்களுள் தலையாயவரான திருநாவுக்கரசு நாயனாரின் குருபூசை 03.05.2015 சித்திரை சதய நட்சத்திர நாளில் வெள்ளிக்கிழமை காலை கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் உள்ள யோகலிங்கேஸ்வரர் சுவாமி கோவிலில் நடைபெற்றது
இதன்போது அதிபர் விரிவுரையாளர்கள் கற்பித்தல் சாரா உத்தியோகத்தர்கள் ஆசிரியமாணவர்கள் இணைந்து நாவுக்கரசரின் திருமுறைப் பாடல்களை இசைத்து வழிபாடாற்றினர்.
யோகலிங்கேஸ்வரர் ஆலய பரிபாலன விரிவுரையாளர் கு பால சண்முகன் நாவுக்கரசரின் சமய தொண்டுகள் பற்றி நாவுக்கரசரின் பாடல்கள் மூலம் விளக்கமளித்து உரையாற்றினார்.