பொது வேட்பாளராகக் களமிறங்கும் ரணில்: ஜூனுக்குப் பின்பே அதிகாரபூர்வ அறிவிப்பு
வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டுவிட்டது என்ற உத்தரவாதத்தை சர்வதேசம் வழங்கிய பின்னரே அதிபர் தேர்தலில் களமிறங்கும் அறிவிப்பை உத்தியோகபூர்வமாக அறிவிக்கவுள்ளதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார் என அறியமுடிகின்றது.
எதிர்வரும் ஜூன் நடுப்பகுதியில் வங்குரோத்து நிலையிலிருந்து இலங்கை மீண்டுவிட்டது என்ற அறிவிப்பு வெளிவரவுள்ளது எனவும் தெரியவருகின்றது.
பொது வேட்பாளர்
அதுவரை நலன்புரித் திட்டங்களை முன்னெடுப்பது எனவும், முன்கூட்டியே தேர்தலில் களமிறங்கும் அறிவிப்பை விடுத்தால் அது நலன்புரித் திட்டங்களைப் பகிரும் விடயத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் எனவும் அதிபர் கூறியுள்ளார். என நம்பகரமான வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
தான் பொது வேட்பாளராகக் களமிறங்க உத்தேசித்துள்ளதால் வெளியில் இருந்துகூட பலரும் ஆதரவு வழங்கலாம் என்ற கருத்தையும் தனக்கு நெருக்கமானவர்களிடம் அதிபர் ரணில் விக்ரமசிங்க முன்வைத்துள்ளார்.