தமிழர் பகுதியில் ஓய்வு பெற்ற அதிபர்: பெற்றோர்களின் நெகிழ்ச்சி செயல்
வவுனியா (Vavuniya), புதுக்குளம் கனிஷ்ட வித்தியாலய அதிபர் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற அதிபரான கமலாம்பிகை சொக்கலிங்கத்துக்கு மாணவர்களின் பெற்றோர்களால் நெகிழ்ச்சியான பிரியாவிடை வழங்கப்பட்டுள்ளது.
ஓய்வுபெற்ற அதிபரை மாணவர்களின் பெற்றோர்கள் பல்லக்கில் சுமந்து சென்று அவருக்கு பிரியாவிடை வழங்கியுள்ளனர்.
அத்துடன், அவருக்கு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களால் பொன்னாடை போர்த்தப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளைங்களில் பகிரல்
இந்நிலையில், இவ்வாறு நெகிழ்ச்சியான முறையில் அதிபருக்கு பிரியாவிடை வழங்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் சமூக வலைத்தளைங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.