போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவ மாணவர்கள் மீது காவல்துறையினர் நீர்த்தாரை பிரயோகம்…!
எதிர்ப்பு பேரணியில் ஈடுபட்ட மருத்துவபீட மாணவர்களை கலைப்பதற்காக அவர்கள் மீது நீர்த்தாரை பிரயோகிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு 07, விகாரமஹாதேவி பூங்காவிற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மருத்துவபீட மாணவர்கள் மீதே இவ்வாறு நீர்த்தாரை பிரயோகிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் தனியார் மருத்துவக் கல்லூரிகளை நிறுவுவதற்கும், தேசிய வணிக முகாமைத்துவப் பாடசாலையில் மருத்துவ பீடமொன்றை நிறுவுவதற்கும் திட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ளது.
தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது
இந்நிலையில், அதனை எதிர்த்து, அந்த திட்டங்கள் நிறைவேற்றப்படக்கூடாது என்பதற்காக மருத்துவ பீட மாணவர்களின் நடவடிக்கைக் குழுவினால் இன்று (03) எதிர்ப்பு ஊர்வலமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
அதன்படி, மருத்துவபீட மாணவர்கள் முன்னெடுத்த எதிர்ப்பு ஊர்வலம் காரணமாக கொழும்பு 07 சிறிமத் அநாகரிக தர்மபால மாவத்தையின் ஒரு பாதை, தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த நிலையை கட்டுக்குள் கொண்டுவரும் பொருட்டு மாணவர்கள் மீது நீர்த்தாரை பிரயோகிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.