பிரித்தானிய உள்ளூராட்சி மன்ற தேர்தல்: பின்னடைவை சந்திக்கும் ஆளும் கட்சி
பிரித்தானியாவின் (britannia )இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலின் வாக்கெண்ணும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் ஆளும் கென்சவேட்டிவ் கட்சி பின்னடைவை சந்தித்துள்ளது.
இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பிராந்தியங்களுக்கான உள்ளூராட்சி மன்ற தேர்தல் நேற்று முன் தினம் (2) நடைபெற்றது.
இந்த தேர்தலின் வாக்கெண்ணும் பணிகள் இடம்பெற்று வரும் நிலையில் தொழிற்கட்சி (labour party) ஆதிக்கம் செலுத்தி வருகின்றது.
உள்ளுராட்சி மன்ற தேர்தல்
107 உள்ளூராட்சி சபைகளில் சுமார் 80 தொடக்கம் 90 இடங்களை தொழில் கட்சி கைப்பற்றக் கூடும் என்று எதிர்பார்கப்படுகிறது.
பிரித்தானியாவில் நடைபெறும் பொது தேர்தலுக்கு முன்னர் நடத்தப்படும் இறுதி தேர்தலாக இது கருதப்படுகிறது.
இந்த தேர்தலின் முடிவுகள் பொதுத் தேர்தலிலும் தாக்கத்தை செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் ரிஷி சுனக்கின் (Rishi Sunak) கென்சவேட்டிவ் கட்சி (Conservative Party) ஆட்சியை இழக்க கூடும் என குறிப்பிடப்படுகிறது.