இஸ்ரேலின் அடுத்த தாக்குதல் எங்கே..எப்போது
இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாக்களுக்கும் இடையிலான யுத்தம் எந்த நிமிடத்திலும் ஆரம்பமாகலாம் என்று, அங்குள்ள களச்சூழலை அடிப்படையாக வைத்து ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டு வருகின்றார்கள்.
இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாக்களுக்கும் இடையே பாரிய யுத்தம் முடிவாகிவிட்ட நிலையில், எப்பொழுது அந்த யுத்தம் ஆரம்பமாகும் என்பதுதான் தற்போதுள்ள ஒரே கேள்வியாக இருக்கின்றது.
இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாக்களுக்கும் இடையே பாரிய யுத்தம் ஏற்படலாம் என்ற அச்சம் காரணமாக, இஸ்ரேல்- லெபனான் எல்லைகளில் இருந்து சுமார் 180,000 பேர் அங்கிருந்து வெளியேறி பாதுகாப்பான பிரதேசங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளார்கள்.
இஸ்ரேல் சொற்ப அளவிலான படை அணிகளை மாத்திரம் காசாவில் நிறுத்திவிட்டு, தனது பெரும்பாலான படை அணிகளை லெபனான் எல்லைகளை நோக்கி நகர்த்திக்கொண்டிருப்பதாக் களமுனைத் தகவல்கள் கூறுகின்றன.