புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு பேரிடி: கனேடிய அரசின் அதிரடி முடிவு…!
கனடாவில் (Canada) புகலிட கோரிக்கை தொடர்பில் புதிய சட்டம் ஒன்று அறிமுகம் செய்யப்படவுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்த சட்டம் தொடர்பில் கனேடிய அரசாங்கம் தெரிவிக்கையில், “புகலிட கோரிக்கை நிராகரிக்கப்படும் நபர்கள் துரித கதியில் நாடு கடத்தப்படக்கூடிய முறைமை நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
அண்மையில் வெளிநாட்டு மாணவர்களின் புகலிடக் கோரிக்கை 1500 வீதமாக உயர்வடைந்துள்ளது.
புகலிட அந்தஸ்து கோரி விண்ணப்பம்
அங்கீகரிக்கப்பட்ட காலத்தின் பின்னர் தொடர்ந்தும் கனடாவில் தங்கியிருப்பதற்காக இவ்வாறு மாணவர்கள் புகலிட அந்தஸ்து கோரி விண்ணப்பம் செய்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
புகலிட கோரிக்கைகளை பரிசீலனை செய்தலை துரிதப்படுத்தவும், நிராகரிக்கப்பட்டவர்களை வேகமாக நாடு கடத்தவும் கூடிய ஏற்பாடுகள் செய்யப்படும்” என குறிப்பிட்டுள்ளது.
கனேடிய பாதீட்டுத் திட்டம்
அதேவேளை, அண்மையில் சமர்ப்பிக்கப்பட்ட கனேடிய பாதீட்டுத் திட்டத்திலும் இதற்கான ஒதுக்கங்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், குடிவரவு மற்றும் புகலிட பாதுகாப்பு சட்டங்களில் திருத்தம் செய்யப்பட உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த மார்ச் மாதம் முதல் இதுவரையில் 46736 பேர் கனடாவில் புகலிட அந்தஸ்து கோரி விண்ணப்பம் செய்துள்ளதாகவும் கடந்த 2023ஆம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது இந்த எண்ணிக்கை 62 வீதத்தினால் அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.