இளவரசர் ஹரி பொறுப்பிலிருந்து விலகவேண்டும்: மேகனால் உருவாகியுள்ள பிரச்சினை
போரில் காயமடைந்த மற்றும் உறுப்புகளை இழந்த ராணுவ வீரர்களுக்காக விளையாட்டுப் போட்டிகளைத் துவங்கினார் பிரித்தானிய இளவரசர் ஹரி. ஆனால், அவரது மனைவி மேகனால், அவர் அந்த விளையாட்டுக்களை நடத்தும் பொறுப்பிலிருந்து விலகவேண்டும் என குரல்கள் ஒலிக்கத் துவங்கியுள்ளன.
விலகிய ராணுவ வீரர்கள்
போரில் காயமடைந்த மற்றும் உறுப்புகளை இழந்த ராணுவ வீரர்களுக்காக, இளவரசர் ஹரி துவக்கியதுதான் இன்விக்டஸ் விளையாட்டுப் போட்டிகள். இந்த போட்டிகள் துவங்கி 10 ஆண்டுகள் ஆகின்றன.
ஆனால், சம்பந்தமே இல்லாமல் ஹரியின் மனைவியான மேகன் விளையாட்டுப்போட்டிகளில் தலையிட்டுவருகிறார். கடந்த ஆண்டு நடைபெற்ற போட்டிகளின்போது, மேகன் விளையாட்டுப் போட்டியின் துவக்க நிகழ்ச்சியில் உரையாற்றியது நினைவிருக்கலாம்.
எனவே, பலருக்கு இன்விக்டஸ் போட்டிகளில் மேகன் தலையிடுவதில் விருப்பம் இல்லை என கூறப்படுகிறது. ஆகவே, விளையாட்டுப்போட்டிகளில் பங்கேற்றுவந்த சுமார் 2,000 முன்னாள் ராணுவ வீரர்கள் விளையாட்டுப்போட்டிகளை விட்டு விலகிவிட்டதாகவும், முன்னாள் ராணுவ வீரர்கள் சிலர், ஹரி இன்விக்டஸ் போட்டிகள் தொடர்பான பொறுப்பிலிருந்து விலகவேண்டுமென கோரி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில், ஹரியின் ரசிகர்கள், இளவரசர் ஹரி இன்விக்டஸ் போட்டிகளை அருமையாக நடத்திவருகிறார், இந்த போட்டிகள் வெறும் விளையாட்டுப் போட்டிகள் அல்ல, அவை காயமடைந்த ராணுவ வீரர்களின் வலிமையையும் உறுதியையும் நினைவுபடுத்தும் விடயங்கள், அவர்களை உற்சாகப்படுத்துவோம் என சமூக ஊடகமான எக்ஸில் ஹரிக்கு ஆதரவாக செய்திகள் வெளியிட்டுவருகிறார்கள்.