15ஆம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்படுமா..! கொழும்பு அரசியலில் பரபரப்பு
எதிர்வரும் பதினைந்தாம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்படும் என கொழும்பு அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருவதாக கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
ஆனால் ஜூன் இரண்டாம் வாரம் வரை தற்போதைய நாடாளுமன்றம் கலைக்கப்படாது என அரசாங்கத்தின் உயர்மட்ட பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
புதிய மின்சாரச் சட்டத்தை
புதிய மின்சாரச் சட்டத்தை ஜூன் முதல் வாரத்தில் நிறைவேற்ற வேண்டும் என்பதால் அதற்கு முன் எக்காரணம் கொண்டும் நாடாளுமன்றம் கலைக்கப்பட மாட்டாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்கூட்டியே நாடாளுமன்றத் தேர்தல்
அதன் பின்னரே அதிபர் தேர்தல் நடத்தப்படும் எனவும், முன்கூட்டியே நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட மாட்டாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.