;
Athirady Tamil News

இலங்கையின் சனத்தொகை தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

0

இலங்கையின் சனத்தொகை சுமார் ஒரு இலட்சத்து நாற்பத்து நாலாயிரத்தால் குறைந்துள்ளதாக மத்திய வங்கியின் அறிக்கை ஒன்று கூறுவதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பேராசிரியர் வசந்த அத்துகோரள(Wasantha Athukorala)கொழும்பு ஊடகமொன்றிடம் தெரிவித்தார்.

பத்து ஆண்டுகளில் மக்கள் தொகை எதிர்மறையான வளர்ச்சியைக் காட்டுவது இதுவே முதல் முறை என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஆண்கள்,மற்றும் பெண்கள் தொகை
மக்கள்தொகை குறைவின் சதவீதம் பூஜ்யம் மற்றும் ஆறு சதவீதம் ஆகும். இதன்படி பெண் மக்கள் தொகை எழுபதாயிரமும், ஆண் மக்கள் தொகை எழுபத்து நாலாயிரமும் குறைந்துள்ளது.

இதேவேளை, கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது பிறப்பு எண்ணிக்கை 27421 ஆக குறைந்துள்ளதாக கூறும் பேராசிரியர், இறப்பு எண்ணிக்கையும் 1447 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

திருமணங்களின் எண்ணிக்கையும்
இந்த அதிகரிப்பு எட்டு சதவீதம். மத்திய வங்கியின் அறிக்கையின்படி நாட்டில் திருமணங்களின் எண்ணிக்கையும் 19,784 ஆக குறைந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.