பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் அதிரடி கைது – அழைத்து வந்த போலீஸ் வாகனம் விபத்து!
பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு அழைத்து வந்த காவல்துறை வாகனம் விபத்தில் சிக்கியது.
சவுக்கு சங்கர்
காவல் துறை அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசியதாக யூடியூபர் சவுக்கு சங்கர் மீது புகார் எழுந்தது. இந்நிலையில் தேனி மாவட்டத்தில் தனியார் விடுதியில் தங்கியிருந்த அவரை அதிகாலை 3 மணியளவில் கோவை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கரை காவல்துறை வாகனம் மூலம் கோவைக்கு அழைத்து வரும்போது திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே அவர்கள் வந்த வாகனம் விபத்தில் சிக்கியது.
போலீசார் திட்டம்
இதில் காவலர்களுக்கும், சவுக்கு சங்கருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தாராபுரம் அரசு மருத்துவமனையில் அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, சவுக்கு சங்கரை கோவைக்கு அழைத்துச் சென்றனர்.
கோவை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வைத்து அவரிடம் விசாரணை மேற்கொள்ள சைபர் கிரைம் போலீசார் திட்டமிட்டுள்ளனர். விசாரணைக்கு பின்னர் சவுக்கு சங்கரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.