சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டதும் வேலையை காட்டிய சந்தேக நபர்! கொழும்பில் மீண்டும் கைது
கொழும்பு – வெல்லம்பிட்டிய பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 2 கிராம் 200 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவெளை, சந்தேகநபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது, களஞ்சியசாலை ஒன்றிலிருந்து இவரால் திருடப்பட்ட இரும்பு பொருட்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
திருடப்பட்ட பொருட்களின் பெறுமதி சுமார் 10 இலட்சம் ரூபா என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 33 வயதுடைய வெல்லம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.
மேலும் குறித்த சந்தேகநபர் குற்றச்செயல் ஒன்றிற்காக 2 வருட சிறைத்தண்டனைகளின் பின்னர் விடுவிக்கப்பட்டவராவார்.
சந்தேகநபர் நேற்று வெள்ளிக்கிழமை (03-05-2024) நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.