வெளிநாடொன்றில் பெருமளவு இலங்கையருக்கு அளிக்கப்பட்ட மன்னிப்பு
ஐக்கிய அரபு அமீரகத்தின் பல்வேறு சிறைகளில் இருந்த 44 இலங்கையர்களுக்கு அந்நாட்டு அரசாங்கத்தால் மன்னிப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஐக்கிய அரபு எமிரேட்ஸின் (United Arab Emirates) வெளிவிவகார அமைச்சு அபுதாபியில் உள்ள இலங்கைத் தூதரகத்திற்கு உத்தியோகபூர்வமாக அறிவித்தது.
ரமழான் மாதத்தில் அளிக்கப்பட்ட பொது மன்னிப்பு
இந்த இலங்கைக் கைதிகள் ஏப்ரல் 2024 ரமழான் மாதத்திற்கான அரச ஆணையால் மன்னிக்கப்பட்டுள்ளனர்.
அரச மன்னிப்பு பெற்ற நாற்பத்து நான்கு இலங்கையர்கள் எதிர்காலத்தில் ஐக்கிய அரபு இராச்சிய அரசினால் இலங்கைக்கு அனுப்பப்பட உள்ளனர்.
பாதுகாப்பாக நாடு திரும்புவதை
அபுதாபியில் உள்ள இலங்கைத் தூதரகம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகாரிகள் மற்றும் இலங்கையின் வெளியுறவு அமைச்சகத்துடன் ஒருங்கிணைத்து அவர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவதை உறுதி செய்யும்.