அம்பாறையில் கோர விபத்து… 25 மாணவர்கள் உட்பட 33 பேர் வைத்தியசாலையில்!
அம்பாறையில் இரண்டு பேருந்துகள் மோதிக்கொண்டதில் 25 பாடசாலை மாணவர்கள் உட்பட 33 பேர் வரை காயமடைந்ததாக பொலிஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து சம்பவம் நேற்றையதினம் (03-05-2024) அக்கரைப்பற்று – அம்பாறை வீதியில் அம்பாறை – கல்ஓயா பாலத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளது.
மதியம் 2:30 மணியளவில் பாடசாலை பேருந்து ஒன்று பயணிகள் போக்குவரத்து பேருந்துடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இரண்டு பேருந்துகளின் சாரதிகளும் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் காயமடைந்த அனைவரும் அம்பாறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.