உதவிக்கு சகோதரி பிப்பாவை களமிறக்கவிருக்கும் இளவரசி கேட் மிடில்டன்
பிரித்தானிய ராணியாக முடிசூட்டிய பின்னர் பிரதான பொறுப்புக்கு தமது சகோதரி பிப்பா மிடில்டனை களமிறக்க இளவரசி கேட் திட்டமிட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
திட்டங்களை முன்னெடுப்பார்
தனது கணவர் இளவரசர் வில்லியம் அரியணை ஏறும்போது இளவரசி கேட் சில திட்டங்களை முன்னெடுப்பார் என்று பிரித்தானிய அரச குடும்பத்து வரலாற்றாசிரியர்களில் ஒருவரான கேட் வில்லியம்ஸ் கூறுகிறார்.
தனது சகோதரி பிப்பாவை பிரதான உதவியாளராக நியமிக்கவும் கேட் மிடில்டனுக்கு திட்டமிருப்பதாக கூறுகின்றனர். தமது குடும்பத்தினருடன் நெருக்கமான உறவைக் கொண்டுள்ள கேட் மிடில்டன் தனது சகோதரிக்கு மிக முக்கியமான அந்த பொறுப்பை அளிப்பார் என்றே கேட் வில்லியம்ஸ் கருதுகிறார்.
கேட் மிடில்டனுக்கு வேறு நெருக்கமான நட்பு வட்டாரங்கள் இல்லை. அவர் தமது தாயார் மற்றும் சகோதரியுடன் மிக நெருக்கமான உறவைக் கொண்டுள்ளவர் என்றும் வில்லியம்ஸ் குறிப்பிடுகிறார்.
நம்பிக்கையான உதவியாளர்
ஆனால் பிப்பாவும் திருமணம் முடித்து, தற்போது மூன்று பிள்ளைகளுக்கு தாயாராக உள்ளார். அவருக்கும் தனிப்பட்ட வாழ்க்கை இருக்கிறது. இருப்பினும், அரச குடும்பத்து பணி என்பதும்,
தமது சகோதரி ராணியாக முடிசூட்டிய பின்னர் அவருக்கு முதன்மை உதவியாளராக பணியாற்றுவதை பிப்பா கண்டிப்பாக நிராகரிக்க வாய்ப்பில்லை என்றே கூறுகின்றனர்.
கேட் மிடில்டன் அடுத்த கட்டத்திற்கு செல்லும் போது, அவருக்கான பணிச்சுமையும் அதிகரிக்கும். அதற்கு நம்பிக்கையான உதவியாளர் பிப்பா மட்டுமே என்றும் வில்லியம்ஸ் தெரிவிக்கிறார்.