சாதாரண தர பரீட்சையின் மீள்திருத்தப் பெறுபேறுகள் வெளியாகின
2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையின் மீள் திருத்தப் பெறுபேறுகள் நேற்று (04) இரவு வெளியிடப்பட்டுள்ளன.
மீள் மதிப்பீட்டுக்காக 49,312 பரீட்சார்த்திகள் விண்ணப்பித்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் (Department of Examinations) தெரிவித்துள்ளது
அவர்களின் 250,311 விடைத்தாள்கள் மீள் மதிப்பீட்டுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த திணைக்களம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
பரீட்சை திணைக்களம்
எனவே பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான http://www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk மூலம் பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடியும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை 2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை நாளை ஆரம்பமாகவுள்ளது.
நான்கு இலட்சத்து 52,979 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றவுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்
இதில் மூன்று இலட்சத்து 87,648 பாடசாலை விண்ணப்பதாரர்களும், 65,331 தனியார் விண்ணப்பதாரர்களும் அடங்குவர்.
நாடளாவிய ரீதியில் 3,527 பரீட்சை நிலையங்களில் பரீட்சை நடைபெறவுள்ளதாகவும், அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது தயார் நிலையில் உள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர (Amith Jayasundara) தெரிவித்துள்ளார்.
அத்துடன் நாடளாவிய ரீதியில் பல இடங்களில் விசேட பரீட்சை நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.