மக்களுக்கு மகிழ்ச்சித் தகவல்: மின் கட்டணத்தை குறைப்பதற்கு யோசனை
நாட்டில் தற்போது நடைமுறையிலுள்ள மின்சார கட்டணத்தை குறைப்பதற்கான யோசனை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் (Public Utilities Commission of Sri Lanka) சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த (Indika Anuruddha) தெரிவித்துள்ளார்.
எனவே மக்கள் உணரும் தொகையால் கட்டணத்தை குறைக்க முன்மொழியப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் உடன்படிக்கையின் பேரில் இந்த மின்சாரச் சலுகை வழங்கப்பட உள்ளது எனவும் சுட்டிக்காட்டினார்.
21.9 வீதத்தினால் குறைப்பு
கடந்த மார்ச் மாதம் (4)ஆம் திகதி வீட்டுப் பாவனைக்கான மின்சாரக் கட்டணம் 21.9 வீதத்தினால் குறைக்கப்பட்டது.
இந்த நிலையில் இம்மாத நடுப்பகுதியில் மின்சாரக் கட்டணம் மீண்டும் கணிசமான அளவில் குறைக்கப்படவுள்ளதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.