கல்பிட்டி கடற்பரப்பில் பெருந்தொகையான பீடி இலைகள் கடற்படையினரால் கண்டுபிடிப்பு!
சட்டவிரோதமாக கடல்வழியாக பீடி இலைகளை கடத்த முற்பட்டபோது அவை சிறிலங்கா கடற்படையினரால் கைப்பற்றபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி, நேற்றைய தினம் (04) கல்பிட்டி உச்சமுனை கடற்கரைப் பகுதியில் சிறிலங்கா கடற்படையினரால், சுமார் 120 கிலோ எடையுள்ள பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சிறிலங்கா கடற்பரப்பில் நடைபெறுகின்ற சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்காக சிறிலங்கா கடற்படையினர் அடிக்கடி ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபடுவது வழக்கம்.
சட்ட நடவடிக்கை
அந்தவகையில் கல்பிட்டி உச்சமுனை கடற்கரைப் பகுதியில் வடமேற்கு கடற்படை கட்டளைத் தளபதி தலைமையில் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது குறித்த பகுதியில், கைவிடப்பட்ட நிலையில் இருந்த 04 சாக்குகள் கண்டெடுக்கப்பட்டு சோதனைக்குட்படுத்தப்பட்ட போது அதிலிருந்து சுமார் 120 கிலோ பீடி இலைகள் மீட்கப்பட்டுள்ளன.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட பீடி இலைகளை, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படும் வரை கடற்படையின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.