பேத்தியை காப்பாற்றி தனது உயிரை பறிகொடுத்த பாட்டி
முச்சக்கர வண்டியில் தனது பேத்தி மோதி விபத்து ஏற்படவுள்ளதை தடுக்க முயன்ற பாட்டி அதே முச்சக்கரவண்டியில் மோதி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
கொழும்பு காலி நெடுஞ்சாலையில் பெந்தோட்டை ரொபோல்கொட பிரதேசத்தில் மாலை நேர வகுப்பிற்குச் சென்ற தனது பேத்தியுடன் வீதியோரம் நடந்து சென்ற பாட்டியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளார்.
ஒரு பிள்ளையின் தாயாரே
பெந்தோட்ட ரொபோல்கொட பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய எம்.மாலினி ரூபலதா என்ற ஒரு பிள்ளையின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சாரதி சந்தேகத்தின் பேரில் கைது
முச்சக்கரவண்டியை செலுத்தி வந்த பிலியந்தலை பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடைய சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு அவரது வேண்டுகோளுக்கு இணங்க காவல்துறை பாதுகாப்பில் பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.