அரசியல் ஒரு மாறும் சமூக அறிவியல்! அனுரகுமார திஸாநாயக்க
அரசியல் என்பது ஒரு மாறும் சமூக அறிவியல் தான். கணித சமன்பாடு அல்ல தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayakke) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் (Colombo) இடம்பெற்ற பேரணியில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
“கடந்த காலத்தில் 3 வீத வாக்குகளை பெற்ற ஜே.வி.பியினால் தற்போது 51 வீத வாக்குகளை பெறமுடியாது என்று கணிதத் துல்லியத்துடன் வாதிடுகிறார்கள்.
அதிக வாக்குகள்
ஆனாலும், அரசியல் என்பது ஒரு கணித சமன்பாடு அல்ல. இது ஒரு மாறும் சமூக அறிவியல்.
எனவே, அரசியல் இயற்கணிதமாக இருந்தால், 6.9 மில்லியன் வாக்குகளைப் பெற்ற கோட்டாபய ராஜபக்ச இன்னும் ஜனாதிபதியாக இருப்பார்.
மேலும், நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெற்றுள்ள மகிந்த ராஜபக்ச பிரதமராக தொடர்ந்திருப்பார்” என சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில், 2024ஆம் ஆண்டு மேதினத்தில் தொழிலாளர்களின் உரிமைகள் குறித்து பேசப்பட்டதை விட அரசியல் பலத்தைக்காட்டும் செயற்பாடுகளே அதிகமாக இருந்ததாக ஆங்கில செய்தித்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.
மேலும், பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக்கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, தமிழரசுக்கட்சி என அனைத்துக்கட்சிகளும் தமது பலத்தை காட்ட மக்களை ஒன்று திரட்டின.
மக்கள் பலம்
எனினும், ஒட்டுமொத்தமாக பார்க்கின்றபோது ஜே.வி.பியின் தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் மக்கள் பலம் அல்லது வாக்குப்பலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
வழமையாக கொழும்பில் ஒரு மேதினக்கூட்டத்தை நடத்தும் ஜே.வி.பி இந்த தடவை நாட்டின் நான்கு இடங்களில் கூட்டங்களை ஏற்பாடு செய்திருந்தது.
யாழ்ப்பாணம், அனுராதபுரம், கொழும்பு மற்றும் மாத்தறையில் நான்கு பேரணிகளை நடத்தியுள்ளது.
இதன்படி, மிகக்குறைவான வாக்குப்பதிவு யாழ்ப்பாணத்தில் இருந்தது. வழமையாக கார்ல் மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின் மற்றும் ரோஹன விஜேவீரவின் பேரணிகளில் காட்சிப்படுத்தப்படும்.
எனினும், இந்த தடவை புதிய அடையாளத்துடன் புதிய அரசியல் அமைப்பாக தேசிய மக்கள் சக்தி வெளிப்பட்டது. அந்தக்கட்சிக்கான சர்வதேச அங்கீகாரத்தின் பின்னணியில் இந்த மாற்றம் வந்துள்ளதை அவதானிக்க முடிந்தது எனவும் குறித்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பி்டத்தக்கது.