கோவிலுக்கு காரில் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன், மனைவி 3 ஜோடிகள் பலி!
ராஜஸ்தானில் காரில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர், மற்றொரு வாகனம் மோதியதில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர்
இந்திய மாநிலம் ராஜஸ்தானில் உள்ள சவாய் மாதோபூர் மாவட்டத்தில், கார் ஒன்றின் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பாரிய விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில் காரில் பயணித்த 3 ஆண்கள், 3 பெண்கள் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மணீஷ் சர்மா – அனிதா, கைலாஷ் சர்மா – சான்டோஷ், சதீஷ் சர்மா – பூனம் ஆகியோர் மனன், தீபாலி ஆகிய பிள்ளைகளுடன் காரில் விநாயகர் கோவிலுக்கு சென்றனர்.
உயிர் தப்பிய பிள்ளைகள்
அப்போது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று, அவர்களின் கார் மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் பிள்ளைகளான மனன், தீபாலி இருவரும் காயமடைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதற்கிடையில் உறவினர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டதுடன், பிரேத பரிசோதனைக்கு பின்னர் உடல்கள் அவர்களிடம் ஒப்படைக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த பொலிஸார், கார் மீது வாகனத்தை மோதிய ஓட்டுனரை தேடி வருகின்றனர்.