;
Athirady Tamil News

பிரேசில் நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தால் 60 பேர் பலி, 70 பேர் காணவில்லை

0

பிரேசிலின் தெற்கே உள்ள மாநிலமான Rio Grande do Sul-ல் கனமழை பேரழிவை ஏற்படுத்தியது.

இதில் குறைந்தது 60 பேர் உயிரிழந்ததாகவும், 70-க்கும் மேற்பட்டோர் காணவில்லை என்றும் உள்ளூர் அதிகாரிகள் கூறியுள்ளனர். ஆனால், இன்னும் சிலர் கணக்கில் வரவில்லை என கூறப்படுகிறது.

மாநிலத்தின் 497 நகரங்களில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு புயலால் பாதிக்கப்பட்டுள்ளதால் 69,000-க்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளனர்.

பாதிக்கப்பட்டுள்ள ரியோ கிராண்டே டோ சுல் மாநிலம், அண்டை நாடுகளான உருகுவே மற்றும் அர்ஜென்டினாவுடன் எல்லைகளைப் பகிர்ந்து கொண்டுள்ளது.

வெள்ளதால் நீர்மின் நிலையத்தில் ஒரு அணையின் பகுதி இடிந்து விழுந்தது. Bento Goncalves-ல் உள்ள மற்றொரு அணை இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது.

பிரேசிலின் தலைநகரமான Porto Alegreவில் குய்பா ஏரி உடைந்தது வெள்ளம் தெருக்களில் நின்றது. இதனால் சர்வதேச விமான நிலையம் அனைத்து விமானங்களையும் காலவரையின்றி நிறுத்தியது.

இந்நிலையில், இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஐரோப்பாவின் பொருளாதார மீட்பு முயற்சிகளுக்கு நிகரான “மார்ஷல் திட்டம்” தேவை என்று மாநில ஆளுநர் எடுவார்டோ லைட் கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.