உயிருடன் புதைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட இளைஞர்… அதிர்ச்சி பின்னணி
அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் பண்ணை ஒன்றில் உயிருடன் புதைக்கப்பட்டதாக கருதப்படும் நபரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தலையில் பலத்த காயங்களுடன்
குயின்ஸ்லாந்தில் உள்ள Mount Mee பகுதியில் அமைந்துள்ள பண்ணை ஒன்றில் தலையில் பலத்த காயங்களுடன் 23 வயதான இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
புதன்கிழமை இரவு சுமார் 8.30 மணியளவில் அவசர உதவிக்குழுவினருக்கு இந்த விவகாரம் தொடர்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த நபர் பாதி புதைக்கப்பட்ட நிலையிலும், காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அந்த நபரை மீட்ட அதிகாரிகள் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இறந்துள்ளதாக அதிகாரிகள் தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது.
கொலை வழக்கு
தற்போது இந்த விவகாரத்தில் Mount Mee பகுதியை சேர்ந்த 21 வயது பெண் ஒருவரும் 23 வயது ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது.
அந்த 21 வயதான பெண் மே 7 ஆம் திகதி கபூல்ச்சர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளார். அதே நீதிமன்றத்தில் ஜூலை 4 ஆம் திகதி அந்த 23 வயது நபர் ஆஜராக உள்ளார் என்றே தகவல் வெளியாகியுள்ளது.