வெள்ளக்காடாக மாறிய பிரேசில்: அதிகரிக்கும் பலி எண்ணிக்கை
பிரேசிலில்(Brazil) உள்ள கிராண்டே டோ சுல் மாகாணத்தில் பெய்து வரும் கன மழையினால் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
குறித்த மாகணத்தில் உள்ள நகரங்களில் உயரிழந்தவர்களின் எண்ணிக்கை 56 உயர்வடைந்துள்ளளது.
மீட்பு பணிகள்
அத்தோடு, சுமார் 74 வரையில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு மாயமாகியுள்ளதாக அந்நாட்டு சிவில் பாதுகாப்பு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், வெள்ளம் காரணமாக மாயமானவர்களை மீட்பதற்கான பணிகளில் பாதுகாப்பு படையினர் மேற்கொண்டு வருகிறதாக கூறப்படுகிறது.
மூடப்பட்டுள்ள விமான நிலையம்
அதேவேளை, கிராண்டே டோ சுல் மாகாணத்தில் உள்ள 497 நகரங்களில் சுமார் அறுபத்து ஒன்பதாயிரத்திற்கு அதிகமானவர்கள் குடியிருப்புக்களை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
மேலும், இந்ந சீரற்ற காலநிலை காரணமாக போர்ட்டோ அலெக்ரேவில் உள்ள சர்வதேச விமான நிலையம் காலவறையின்றி மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.