நூற்றுக்கும் மேற்பட்ட கடவுச்சீட்டுகளுடன் வடிகாலில் கிடந்த பை
மஹரகம பகுதியில் உள்ள வடிகால் ஒன்றில் கடவுச்சீட்டுகள் அடங்கிய பை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த பையில் 180 கடவுச்சீட்டுகள் இருப்பது தெரியவந்துள்ளது.
வெளிநாட்டு கடவுச்சீட்டுகள்
இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, அந்த பையில் மஹரகமவில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தில் இருந்து பெறப்பட்ட 180 வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் இருப்பது தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் சுமார் 26 கோடி ரூபாவை மோசடி செய்துவிட்டு தற்போது தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.