கனடா தபால் திணைக்களம் எதிர்நோக்கியுள்ள நிதி நெருக்கடி
கனேடிய தபால் திணைக்களத்தின் நிதி நிலைமைகள் மிகவும் மோசமான நிலையில் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதன்படி இதுவரையில் தபால் திணைக்களம் அடைந்துள்ள மொத்த நட்டம் மூன்று பில்லியன் டொலர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில்,ஓராண்டு காலப்பகுதிக்குள் நிதிப் பற்றாக்குறை நிலைமை ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
முத்திரைகளின் கட்டணங்கள்
கனேடிய தபால் திணைக்களம் கடந்த 2023ம் ஆண்டில் 748 மில்லியன் டொலர் நட்டத்தை எதிர்நோக்கியுள்ளது.
இதனையடுத்து முத்திரைகளின் கட்டணங்களை அதிகரிப்பதன் மூலம் ஏற்பட்டுள்ள நட்டத்தை ஈடு செய்ய முடியாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நட்டம்
கடந்த 2018ம் ஆண்டு முதல் கனேடிய தபால் திணைக்களம் தொடர்ச்சியாக நட்டமடைந்து செல்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் தபால் விநியோக எண்ணிக்கைகளும் குறைவடைந்து செல்லும் போக்கினை பதிவு செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.