45 நாட்களில் 310 ஐஸ்கிரீம்கள் ஓர்டர் செய்த இளைஞர்! அறிக்கை வெளியிட்ட Swiggy
கோடை காலத்தில் வெயில் அதிகமாக உள்ளதால் Swiggy -ல் மும்பையை சேர்ந்த ஒரு நபர் 45 நாட்களில் 310 ஐஸ்கிரீம்கள் ஓர்டர் செய்துள்ளார்.
தற்போது கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால், பொதுமக்கள் இளநீர், நுங்கு என்று குடிநீர் பானங்களை அருந்துகின்றனர்.
Swiggy அறிக்கை
இந்நிலையில் பிரபல உணவு விநியோக நிறுவனமான ஸ்விக்கி (Swiggy) தனக்கு வந்துள்ள ஓர்டர்கள் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதாவது, கடந்த மார்ச் 1-ம் திகதி முதல் ஏப்ரல் 15 வரையிலான காலத்தில் வந்துள்ள ஓர்டர்கள் குறித்து கூறியுள்ளது.
அந்த அறிக்கையின்படி, கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 16 சதவீதத்திற்கும் மேலாக ஐஸ்கிரீம்கள் ஓர்டர்கள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுவும் குறிப்பாக இரவு 7 மணி முதல் நள்ளிரவு வரையிலான நேரத்தில் 6.9 லட்சத்திற்கும் அதிகமாக ஐஸ்கிரீம்கள் ஓர்டர்கள் செய்யப்பட்டுள்ளன.
அதேபோல காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரையிலான நேரத்தில் 4.6 லட்சம் ஐஸ்கிரீம்கள் ஓர்டர்கள் செய்யப்பட்டுள்ளன.
காலை 7 மணி முதல் 11 மணி வரையிலான நேரத்தில் சுமார் 80 ஆயிரம் ஐஸ்கிரீம்கள் ஓர்டர்கள் செய்யப்பட்டுள்ளன.
இதில், மும்பையை சேர்ந்த நபர் ஒருவர் 45 நாட்களில் 310 ஐஸ்கிரீம்கள் ஓர்டர் செய்துள்ளார். இவர், இந்திய அளவில் அதிகமாக ஐஸ்கிரீம்கள் ஓர்டர் செய்த நபர் ஆவார்.